நாட்டில் அமுல்படுத்தப்பட்டு இருந்த பயணக்கட்டுப்பாடுகள் தொடர்ந்து 21ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ள நிலையில் எவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என இராணுவத் தளபதி விளக்கமளித்துள்ளார்.
இதன்படி, ஆடைத் தொழிற்சாலைகள், நிர்மாணத்துறை பணிகள், வாரந்த சந்தைகள், சேதன உர உற்பத்தி, உற்பத்தி நடவடிக்கைகள், விவசாயம் ஆகிய பணிகளை முன்னெடுக்க முடியும்.
அத்துடன், வங்கிகள் மற்றும் பொருளாதார மத்திய நிலையங்களை திறக்கும் திகதி பின்னர் அறிவிக்கப்படும்.
எவ்வாறாயினும், பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ள காலப் பகுதியில் வழமை போன்று அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.