நீதித்துறையுடன் தொடர்புடைய பல புதிய பதவிகளுக்கு பாராளுமன்ற சபை இணக்கம்

Date:

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராக பதவி வகித்த நீதிபதி அர்ஜுன ஒபேசேகரவை, உயர்நீதிமன்ற நீதியரசராக நியமிக்க நாடாளுமன்ற பேரவை இணக்கம் தெரிவித்துள்ளது.

நீதியரசர் சிசிரி டி ஆப்ரூவின் ஓய்வின் பின்னர் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு நீதிபதி ஒபேசேகரவை நியமிக்குமாறு ஜனாதிபதியினால் பரிந்துரைக்கும் முன்வைக்கப்பட்டது.

இந்நிலையில், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற் நாடாளுமன்ற பேரவை கூட்டத்தின்போது, இவ்வாறு இணக்கம் தெரிவிக்கப்பட்டதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், நீதியரசர் கே.பி. பெர்னாண்டோவை மேன்முறையீட்டு நீதிமன்றின் தலைவராகவும், நீதிபதி சசி மகேந்திரனை மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாகவும், நீதியரசர் எல்.டி.பீ. தெஹிதெனியவை நீதிச் சேவை ஆணைக்குழுவின் உறுப்பினராகவும் நியமிக்க நாடாளுமன்ற பேரவை இவ்வாறு அனுமதி வழங்கியுள்ளது.

Popular

More like this
Related

சுரேஷ் சலேயின் உடல் ஆரோக்கியம் மோசமடைந்து வருவதால் ஜனாதிபதிக்கு கடிதம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் ஆரோக்கிய நிலைமை...

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் நாளை புத்தளத்தில் இஸ்லாமிய மாநாடு!

இலங்கையில் பல தசாப்த காலங்களாகத் தொடர்ந்து இஸ்லாமியப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு...

நாட்டை சுற்றியுள்ள கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை !

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த...

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் தூதுவருடன் அமைச்சர் நலிந்த சந்திப்பு

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) நல்லெண்ண தூதுவர் யோஹெய்...