பயணக் கட்டுப்பாட்டை நீக்குமாறு தேரர் ஒருவர் பிரதான வீதியின் நடுவில் அமர்ந்து எதிரிப்பு ஆர்ப்பாட்டம்

Date:

தம்புள்ள பொருளாதார மையம் அருகே வீதியின் நடுவில் தேரர் ஒருவர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

திம்புலாகல விகாரை வசிக்கும் மாத்தளே ஷாசரத்ன எனும் தேரரே இவ்வாறு எதிர்ப்பு ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டுள்ளார்.

தேரர் வீதியின் நடுவே அமர்ந்து நாட்டை மீண்டும் திறக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினார். தம்புள்ள பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் இவரை அகற்ற எடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்தன.

பின்னர் தம்புள்ள நகராட்சி மன்றத்தின் மேயர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து, ஜனாதிபதி செயலகத்துடன் ஒருவரை தொடர்பு கொள்ள நகராட்சி மன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

பின்னர் அவர் நகரசபையில் செயலாளர் ஒருவருடன் தொலைபேசியில் பேசும் வாய்ப்பு கிடைத்ததாகவும் பின்னர் அறிக்கை இன்றை பெற்றுக்கொள்வதற்காக தேரரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அவரது வேண்டுகோள் என்னவென்றால், ‘நாடு மூடப்பட்டுள்ளது, ஆனால் கடைகள் திறக்கப்படுகிறது, வர்த்தகம் செய்யப்படுகிறது, நாட்டை இவ்வாறு மூடியிருப்பது எந்த அர்த்தமும் இல்லை, சரியாக நாட்டை மூடவும், மக்களுக்கு பொய் சொல்லாமல் நாடு முழுவதையும் திறக்கவும். ‘
ஜனாதிபதிக்கும் தேரர் வன்மையாக கண்டித்துள்ளார்

https://fb.watch/678mqBthYd/

Popular

More like this
Related

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...