தற்போதுள்ள பொலிஸ் தலைமையகத்தில் இடம் பற்றாக்குறை இருப்பதால், சில பிரிவுகள் வாடகை அடிப்படையில் செயல்பட்டு வருகிறது. எனவே, போதுமான இடவசதியுடன் புதிய பொலிஸ் தலைமையகத்தை நிர்மாணிக்க பாதுகாப்பு அமைச்சர் முன்வைத்த திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.