கிழிந்த வடிவு மற்றும் உடலுடன் ஒட்டியிருக்கும் இறுக்கமான ஆடைகளை அணிவதற்கும், உடல்பாகங்களில் வளையங்கள் அணிவதற்கும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடன் அமுலுக்கு வரும் வகையில் தடை விதித்துள்ளார்.
மேலும், முதலாளித்துவ கலாசாரம் மற்றும் மேற்கத்தய தாக்கங்களை நாட்டுக்குள் அனுமதிக்க மாட்டோம் எனக்கூறியுள்ள கிம் ஜாங் உன், ஸ்பைக் உள்ளிட்ட தலை அலங்காரங்கள், தலைக்கு கலர் டை பயன்படுத்துவது உள்ளிட்டவற்றுக்கும் தடை விதித்துள்ளார்.
ஆண்களும் பெண்களும் அங்கீகரிக்கப்பட்ட 215 சிகை அலங்காரங்களில் ஒன்றை மட்டுமே இனி வைக்க வேண்டும் எனவும், ஸ்பைக் போன்ற தலை அலங்காரங்களை வைத்துக்கொள்வது சமுக விரோத செயல் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.