இலங்கைக்கு மேலும் 1.6 மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகள்

Date:

இலங்கைக்கு மேலும் 1.6 மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகள் நாளை மறுதினம் கிடைக்கவுள்ளதாக கொழும்பிலுள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது. இந்த தடுப்பூசிகள் அன்பளிப்பாக வழங்கப்படவுள்ளதாக அந்த தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்று வரை 8,439,469 பேருக்கு கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. அவற்றுள் 6,693,072 பேர் முதலாவது தடுப்பூசிகளை மாத்திரம் செலுத்தி கொண்டவர்கள் என தொற்று நோயியல் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன் 1,746,397 பேர் இரண்டு தடுப்பூசிகளையும் செலுத்தி கொண்டவர்கள் என அந்த பிரிவு குறிப்பிட்டுள்ளது. அதில் பெரும்பாலானோருக்கு சைனோபாம் தடுப்பூசிகளே செலுத்தப்பட்டுள்ளன.

இதன்படி 6,265,371 சைனோபாம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதற்கமைய 4,919,323 பேர் சைனோபாம் முதலாம் தடுப்பூசியையும், 1,346,048 பேர் சைனோபாம் இரண்டாம் தடுப்பூசியையும் பெற்றுக்கொண்டுள்ளதாக தொற்று நோயியல் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

பேருந்து கட்டண திருத்த முன்மொழிவு இன்று அமைச்சரவையில்!

பேருந்துக் கட்டணங்களை உயர்த்துவதற்கான முன்மொழிவு இன்று (23) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. அண்மைய...

உத்தியோகபூர்வமற்ற பொலிஸ் செய்திகளை நம்ப வேண்டாம்: பொலிஸ் ஊடகப் பிரிவு

இலங்கை பொலிஸாரால் வெளியிடப்பட்டதைப் போன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் ஒரு...

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும்...

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...