இலங்கைக்கு வந்த இந்திய தடுப்பூசியில் எய்ட்ஸ் கூறுகள் இருப்பதாக வெளியிடப்பட்டுள்ள செய்தி உண்மைக்கு புறம்பானது

Date:

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட தடுப்பூசியில் எய்ட்ஸ் கூறுகள் இருப்பதாக வெளியிடப்பட்டுள்ள செய்தி உண்மைக்கு புறம்பானது என்று அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பிரசன்ன தெரிவித்தார்.

இது தடுப்பூசியுடன் தொடர்பான விடயம் அல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.

“இதுதொடர்பான விடயம் பத்திரிக்கை ஒன்றில் தலைப்பு செய்தியாக வெளிவந்துள்ளது. இந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை நாம் கவனம் செலுத்தும் போது சில விடயங்களை புரிந்து கொள்ள முடியும். குறிப்பிட்ட இந்திய நிறுவனம் ஒன்றினால் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்ட மருந்தில் இவ்வாறான எய்ட்ஸ் கூறு இருப்பதாக சந்தேகிக்கப்பட்டது. இதனால் இந்தியாவில் இருந்து பெறப்படவிருந்த தடுப்பூசி பெறுகையை அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் இடை நிறுத்தியது.

அமைச்சரவை விசேட பெறுகை குழுவிடம் இந்த விடயம் முன்வைக்கப்பட்டது. இந்த குழு விரிவாக ஆராய்ந்த பின்னரே நாம் நடடிக்கை மேற்கொண்டோம்.

இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்ட மருந்தில் இவ்வாறான எய்ட்ஸ் கூறு இருப்பதாக சந்தேகிக்கப்பட்ட விடயம் தொடர்பிலேயே இந்த தலைப்பு செய்தி எழுதப்பட்டுள்ளது. தடுப்பூசிக்கும் இதற்கும் எந்தவித தொடர்பும் இல்லை.

பொறுப்பற்ற விதத்தில் பொறுப்பான பத்திரிகை நிறுவனம் இவ்வாறு செய்தி வெளியிடுவதையிட்டு நாம் கவலையடைகின்றோம். தடுப்பூசி ஏற்றிக்கொள்வதில் பொது மக்களுக்குள்ள ஆர்வம் மற்றும் நம்பகத்தன்மையை இவ்வாறு சீர்குலைக்கப்படுவதையிட்டு வருந்துகின்றோம் என்றும் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பிரசன்ன கூறினார்.

 

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி...

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...