இலங்கையில் இதுவரை 4,523,770 பேருக்கு கொவிட் தடுப்பூசி

Date:

இலங்கையில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 337,445 பேருக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் ஒரு நாளில் செலுத்தப்பட்ட அதிகளவான தடுப்பூசிகள் இதுவாகும் என அவர் தெரிவித்துள்ளார்.இதேவேளை நாட்டில் இதுவரை 4,523,770 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.இதற்கமைய, நேற்றைய தினத்தில் (13) மாத்திரம் 289,122 பேருக்கு சீனாவின் சைனோபார்ம் (sinopharm) தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது.

மேலும், சைனோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் நேற்று 32,385 பேருக்கு போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, இதுவரை 385,885 பேருக்கு கொவிசீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளது.

அத்துடன் இதுவரை 154,003 பேருக்கு ஸ்புட்னிக் V தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.மேலும் 14,464 பேருக்கு ஸ்புட்னிக் V தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையில் அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டுள்ள சீன பிரஜைகள் 2,865 பேருக்கு சைனோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதுடன் 2,435 பேருக்கு இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

தேர்தல் சட்ட மறுசீரமைப்பு: சாய்ந்தமருதில் சிவில் சமூக அமைப்புகளின் விசேட செயலமர்வு!

இலங்கை தேர்தல் சட்ட மறுசீரமைப்பு தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழு பொதுமக்களிடமிருந்து...

முன்னணி இஸ்லாமிய அறிஞர் மௌலானா சையத் சல்மான் ஹுசைனி நத்வி காலமானார்

முன்னணி இஸ்லாமிய அறிஞரும், எழுத்தாளரும், கல்வியாளருமான மௌலானா  சையத் சல்மான் ஹுசைனி...

பொசொன் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் 18,412 தன்சால்கள் பதிவு!

பொசொன் பெளர்ணமி பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் 18,000-க்கும் மேற்பட்ட ‘தன்சால்கள்’...

வரலாற்றுச் சிறப்புமிக்க பொசன் பௌர்ணமி தினம் இன்று!

இலங்கையில் பௌத்த தர்மம் உருவாகிய தினத்தை பொசன் பௌர்ணமி தினமாக பௌத்தர்கள்...