இலங்கை கிரிக்கெட் அணித்தலைவராக தசுன் சானக்க!

Date:

இந்தியா அணிக்கு எதிரான தொடரில்இலங்கையின் ஒருநாள் மற்றும் இருபதுக்கு இருபது அணியின் தலைவராக தசுன் சானக்க நியமிக்கப்படவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் குசல் ஜனித் பெரேராவுக்கு பதிலாக சகலதுறை வீரர் தசுன் சானக்க இலங்கை அணிக்கு தலைவராக செயற்படுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் எதிர்வரும் 13, 16 மற்றும் 18 ஆம் திகதிகளில் ஒருநாள் சர்வதேச போட்டிகளும், எதிர்வரும் 21, 23 மற்றும் 25 ஆம்திகதிகளில் இருபதுக்கு இருபது போட்டிகளும் இடம்பெறவுள்ளன.

மேற்படி ஆறு போட்டிகளும் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ளன.

இங்கிலாந்துடனான தொடரில் பங்கேற்று நாடுதிரும்பிய இலங்கை அணியினர் தற்போது விடுதிகளில் அவசியமான தனிமைப்படுத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதனையடுத்து, எதிர்வரும் 10 ஆம்திகதி சனிக்கிழமை இலங்கை அணியினர் பயிற்சிகளை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

கதிர்காம பகுதியில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல: சமூக ஊடகங்களில் பரவி வரும் கருத்துக்கள் தவறானதாகும் – கோட்டாபய

கதிர்காமத்தில் மாணிக்க கங்கைக்கு அருகில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல...

இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிய விதத்தை வெளிப்படுத்தி பொலிஸார்

கணேமுல்ல சஞ்சீவ கொலை குற்றச்சாட்டில் நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி...

2 ஆண்டு போர் முடிவுக்கு வந்தது: டிரம்ப் தலைமையில் இஸ்ரேல் – ஹமாஸ் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது: அடுத்து என்ன?

இஸ்ரேல் - காசா போர் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. நேற்று எகிப்தில்...