இலஞ்ச ஊழல் வழக்கில் இருந்து நிச்சங்க சேனாதிபதி உட்பட இருவர் விடுதலை!

Date:

355 இலட்சம் ரூபா பணத்தை இலஞ்சமாக வழங்கியமை மற்றும் பெற்றுக் கொண்டமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த எவன்கார்ட் நிறுவன தலைவர் நிச்சங்க சேனாதிபதி மற்றும் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் பாலித்த பெர்ணான்டோ ஆகியோரை விடுதலை செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

குறித்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா முன்னிலையில் இன்று (27) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

இதன்போது குறித்த இருவருக்கும் எதிராக மீண்டும் வழக்கு தாக்கல் செய்யும் உரிமையின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்டிருந்த குற்றப் பத்திரிகையை இரத்து செய்யுமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தனக்கு அறிவிப்பு விடுத்துள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு சார்ப்பில் ஆஜரான அதன் பிரதி பணிப்பாளர் நாயகம் துஷாரி ஜயரத்ன நீதிமன்றத்திடம் தெரிவித்திருந்தார்.

Popular

More like this
Related

டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தால் 1.9 பில்லியன் ரூபா ஒதுக்கீடு!

டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு ஜனாதிபதி...

எம்.பிக்களுக்கான ஓய்வூதியங்களை நீக்கும் சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணாக அமையவில்லை: உயர்நீதிமன்றம் அறிவிப்பு!

அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரைக்கு இணங்க, பாராளுமன்ற ஓய்வூதியங்கள் (நீக்குதல்)  எனும்...

விவாகரத்து மற்றும் முஸ்லிம் திருமணச் சட்டம் தொடர்பான இரண்டு தனிநபர் மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!

இலங்கையின் தனிநபர் சட்டங்களை நவீனமயமாக்கும் நோக்கில், ஜனாதிபதி சட்டத்தரணியும் நாடாளுமன்ற உறுப்பினருமான...

கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தில் ‘காஷ்மீர் ஒற்றுமை தினம்’ அனுஷ்டிப்பு

கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தில் காஷ்மீர் ஒற்றுமை தினத்தை முன்னிட்டு கருத்தரங்கு...