நாட்டில் மேலும் சில பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் மாவட்டம் | காரைநகரில் உள்ள கலவந்தால்வு பகுதி, ஊர்காவற்துறை பிரதேசத்தை சேர்ந்த கள்ளித் தெரு பகுதி,
கண்டி மாவட்டம் |சுதுஹம்பொல பகுதியை சேர்ந்த வெலமெட வீதி
நுவரெலியா மாவட்டம் | கொத்மலை, டன்சின் கிராம உத்தியோகத்தர் பிரிவை சேர்ந்த மத்திய பகுதி ஆகிய பிரதேசங்கள் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.