உயர் கல்வியை தொடர வெளிநாடுகளுக்கு செல்லவுள்ள மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொவிட் பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும், தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் தேவையுள்ள மாணவர்கள் இன்று(02) முதல் அதற்கான முன்பதிவுகளை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இணையவழியாக இந்த முன்பதிவுகளை மேற்கொண்டதன் பின்னர், தடுப்பூசி செலுத்தப்படும் திகதி, நேரம் மற்றும் இடம் என்பன குறுந்தகவல் ஊடாக குறித்த மாணவர்களுக்கு அறிவிக்கப்படும்.
குறித்த இணையத்தளத்துக்கு https://pre-departure-vaccine.covid19.gov.lk/பிரவேசிப்பதன் ஊடாக, மாணவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கான முன்பதிவுகளை மேற்கொள்ள முடியும்.