உலகளாவிய கலாசார சாரணர் ஜம்போரி நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு!

Date:

இம்முறை இடம்பெறும் மெய்நிகர் உலகளாவிய கலாசார சாரணர் ஜம்போரி நிகழ்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ பங்குபற்றினார்.

 

தற்போதைய கொவிட் நோய்த்தொற்று நிலைமைகள் காரணமாக, வரலாற்றில் முதல் முறையாக, இந்த ஜம்போரி மெய்நிகர் தொழில்நுட்பத்தில் மூன்று நாட்கள் (16, 17 மற்றும் 18) உலகெங்கிலும் இருந்து நூறு நாடுகளைச் சேர்ந்த 20,000க்கும் மேற்பட்ட சாரணர்களின் பங்கேற்புடன் நடைபெறுகிறது.

 

“கலாசார ரீதியாக ஒரே சாரணர் உலகம்” என்ற கருப்பொருளின் கீழ் இடம்பெறும் உலகளாவிய கலாசார சாரணர் ஜம்போரியின் மூலம், தற்போதைய கொவிட் நோய்த்தொற்று நிலைமைகளுக்கு மத்தியில், வீடுகளில் இருக்கும் சாரணர்களுக்கு கலாசார ரீதியாக பல்வேறு புத்தாக்க நிகழ்ச்சித்திட்டங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

“எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய காலநிலை மாற்றம், மோதல்கள் மற்றும் தொற்றுநோய், உயிர்ப் பல்வகைமை இழப்பு, சுற்றுச்சூழல் அழிவு, உணவுப் பாதுகாப்பு, நீருக்கான அணுகல் போன்ற பிரச்சினைகள், எதிர்காலத்தில் வெற்றிகொள்ள வேண்டிய சவால்களாகும். இந்த எதிர்காலச் சவால்களை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளத் தேவையான திறன்களை இளைஞர்களுக்கு அளிக்க வேண்டும்” என்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

 

எமது வாழ்வொழுங்கை மாற்றிக் கொள்வதற்கு எம்மைக் கட்டாயப்படுத்தும் உலகளாவிய கொவிட் 19 தொற்று நோய் நிலைமைகளுக்கு மத்தியில், அதனை ஒரு சவாலாகக் கருதாது, தற்போதைய தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி சாரணர் இயக்கம் மேற்கொண்டுள்ள முன்னெடுப்பு, எளிய ஆனால் ஆழமான முன்னுதாரணத்தை வழங்கியிருக்கிறது” என, ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

 

பல்வேறு நாடுகளுக்கே உரிய தனித்துவமான கலாசாரப் பெறுமானங்களை உள்ளடக்கிய ‘உலகளாவிய கலாசார சாரணர் ஜம்போரி’, இலங்கையின் தலைமை சாரணரான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் தலைமையில், ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (16) பிற்பகல் ஆரம்பமானது. இந்த நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

 

உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள தனித்துவமான கலாசார வேறுபாடுகள் மற்றும் பாரம்பரியங்களை ஒவ்வொருவரிடம் இருந்தும் கற்றுக்கொள்வது, எதிர்கால உலகளாவிய செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு அடித்தளமாக அமையும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

 

தற்போதைய இளைஞர்கள் ஒவ்வொருவருக்கும இடையில் ஏற்படுத்தப்படும் உறவுகள், எதிர்காலத்தில் தெளிவான உலகளாவிய நிலைப்பாட்டுக்கு காரணமாக அமையும் என்று ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டினார்.

 

சாரணர் வரலாற்றில் முதன் முறையாக இணைய தொழிநுட்பத்தின் ஊடாக இடம்பெறும் சர்வதேச சாரணர் ஜம்போரிக்கு, சாரணர்கள் மற்றும் சாரணர் தலைவர்கள் இருபதாயிரத்துக்கும் அதிகமானவர்கள் பதிவு செய்துள்ளதாக, ஜம்போரி ஆலோசகர் உலக சாரணர் குழு உறுப்பினர் சட்டத்தரணி ஜனப்ரித் பெர்னாண்டோ தெரிவித்தார்.

 

இந்த நிகழ்வின் விசேட அதிதியாக, உலக சாரணர் குழுவின் தலைவர் கிரேக் டேர்பி (Craig Turpie) பங்குபற்றினார். உலக சாரணர் சங்கத்தின் தலைவர்கள், ஏனைய நாடுகளின் சாரணர் ஆணையாளர்கள் உள்ளிட்ட உலகத் தலைவர்களும் கலந்துகொண்டனர்.

Popular

More like this
Related

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் 695.7 மில்லியன் டொலர் வரவு!

இந்த ஆண்டு செப்டம்பரில் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டிற்கு மொத்தம் 695.7...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப.1.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (13) நாட்டின் மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மாகாணங்களிலும் மன்னார்...

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...