உளுந்து பயிர்ச் செய்கையை அழிக்கும் புது வகை நோய்!

Date:

மன்னார் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள பல கிராமங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள உளுந்து பயிர்ச் செய்கைக்கு ஏற்பட்டுள்ள ஒரு வகை நோய் தொற்று காரணமாக குறித்த செய்கையினை முழுமையாக அழிக்கும் நிலைக்கு தோட்டச் செய்கையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

 

மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள பாலையடி புதுக்குளம், பாலப்பெருமாள் கட்டு, குருவில் ஆகிய கிராமங்களில் மேட்டு நில பயிர்ச் செய்கையான தோட்டச் செய்கை அதிக அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

 

இவ்வருடம் சுமார் ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் உளுந்து மற்றும் கச்சான் பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

 

இவ் வருடம் உரம், மற்றும் கிருமி நாசினி போன்றவற்றிற்கு ஏற்பட்ட தட்டுப்பாடுகள் காரணாக உளுந்து பயிர்ச் செய்கையை தாக்கிய ஒரு வகை நோயினை கட்டுப்படுத்த முடியாத நிலையில் அப்பகுதி விவசாயிகள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

 

இந்த நிலையில் தற்போது குறித்த உளுந்து பயிர்ச் செய்கையை முழுமையாக அழிக்கும் நடவடிக்கையில் தோட்டச் செய்கையாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

 

உரம், மற்றும் கிருமி நாசினி போன்றவற்றிற்கு ஏற்பட்ட தட்டுப்பாடுகள் காரணாக தமது பயிர்களுக்கு அதனை உரிய நேரத்தில் பயண் படுத்தாக காரணத்தினாலேயே குறித்த நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளதாக தோட்டச் செய்கையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...