எஞ்சியுள்ள ஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவணை அறிவிப்பு!

Date:

ஐபிஎல் தொடரில் எஞ்சியுள்ள போட்டிகளுக்கான அட்டவணை அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

 

கொரோனா சூழல் காரணமாக கடந்த வருட ஐபிஎல் போட்டி, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இந்த வருடப் போட்டி இந்தியாவிலேயே நடத்தப்பட்டது. சென்னை, மும்பை, கொல்கத்தா, ஆமதாபாத், தில்லி, பெங்களூர் ஆகிய ஆறு நகரங்களில் ஐபிஎல் போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

 

ஆரம்பத்தில் சென்னை, மும்பையில் ஐபிஎல் ஆட்டங்கள் நடைபெற்றன. அடுத்ததாக ஆமதாபாத், தில்லியில் ஆட்டங்கள் நடைபெற்று வந்தன.

 

கொரோனா பாதுகாப்பு வளையத்தில் இருந்தும் சில வீரா்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து ஐபிஎல் 2021 போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

 

52 நாள்களுக்கு நடைபெறுவதாக இருந்த ஐபிஎல் போட்டியில் 60 ஆட்டங்கள் இடம்பெற இருந்தன. ஆனால் 24 நாள்களில் 29 ஆட்டங்கள் மட்டுமே நடைபெற்றன. ஐபிஎல் 2021 போட்டியின் மீதமுள்ள ஆட்டங்கள், செப்டம்பர் – அக்டோபர் மாதங்களில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என பிசிசிஐ துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்திருந்தார். இந்தநிலையில் ஐபிஎல் தொடரில் எஞ்சியுள்ள போட்டிகளுக்கான அட்டவணை அதிகாரபூர்வமாக இன்று வெளியிடப்பட்டுள்ளது.

 

அதன்படி செப்டம்பர் 19 ஆம் திகதி மீண்டும் தொடங்கும் ஐபிஎல் தொடரின் முதலாவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோத உள்ளன. இறுதிப் போட்டி அக்டோபர் 15 ஆம் திகதி நடைபெற உள்ளது. இதுவரை நடந்து முடிந்த போட்டிகளின் அடிப்படையில் புள்ளிப்பட்டியலில் டெல்லி, சென்னை, பெங்களூரு மற்றும் மும்பை ஆகிய நான்கு அணிகள் முதல் நான்கு இடங்களில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...