ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் கத்தோலிக்க பேச்சாளர்கள் குழுவினால் ஜனாதிபதிக்கு 19 பக்கங்களைக் கொண்ட கடிதம்!

Date:

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில், தேசிய கத்தோலிக்க பேச்சாளர் குழு, ஜனாதிபதிக்கு 19 பக்கத்திலான கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையிலான இந்தக் குழுவில், ஆறு ஆயர்கள் உட்பட 27 அருட்தந்தையர்களும் அங்கம் வகிக்கின்றனர்.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டு, சுமார் 5 மாதங்கள் கடந்துள்ள நிலையில், அதன்

பரிந்துரைகள் இதுவரையில் நடைமுறைப்படுத்தப்படாமை குறித்து தங்களது கவலையை வெளிப்படுத்துவதாக தேசிய கத்தோலிக்க பேச்சாளர் குழு அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளது.

அத்துடன், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் காவல்துறைமா அதிபர் பூஜித் ஜயசுந்தர உள்ளிட்டவர்கள் தொடர்பில், ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரை நடைமுறைப்படுத்தப்படாமை குறித்தும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

ரிஷாட் பதியூதீன், ரியாஜ் பதியூதீன், எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்டவர்கள் தொடர்பில், மேலதிக விசாரணைகள் இடம்பெறாமை தொடர்பிலும் தேசிய கத்தோலிக்க பேச்சாளர் குழு கேள்வி எழுப்பியுள்ளது.

Popular

More like this
Related

இன்று முதல் முச்சக்கர வண்டி கட்டணங்களில் மாற்றம்

ஒரு கிலோ மீட்டருக்கான முச்சக்கர வண்டி கட்டணத்தை 10 ரூபாவினால் அதிகரிப்பதற்கு...

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அநீதியான கைது: உச்ச நீதிமன்றத்தில் மாவனல்லை இளைஞருக்குக் கிடைத்த நீதி.

மாவனல்லைப் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய முகமது ரிஃபாய் முகமது சுஹைல்...

பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை உயர்வு!

இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் எடையுள்ள ஒரு இறாத்தல் பாணின்...

பாகிஸ்தானின் 86-வது தேசிய தினம்: இலங்கையில் விமரிசையான கொண்டாட்டம்!

இலங்கையில் வாழும் பாகிஸ்தானிய சமூகம் மற்றும் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் பாகிஸ்தானின்...