இன்று (02) காலை சீனாவிலிருந்து மேலும் ஒரு மில்லியன் சினோபார்ம் தடுப்பூசி டோஸ்கள் இலங்கை வந்தடைந்ததாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். மேலும் குறித்த தடுப்பூசி டோஸ்கள் தொகை இன்று (02) அதிகாலை 4.30 மணி அளவில் சீனாவின் பீஜிங்கில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்ததாக ஶ்ரீலங்கன் விமான சேவையின் ஊடக முகாமையாளர் தீபால் பெரேரா தெரிவித்தார்.