ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் இன்று ஆரம்பமானது

Date:

கொரோனா பீதி காரணமாக கடந்த ஆண்டு ஒத்திவைக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய விளையாட்டு போட்டியான ஒலிம்பிக் விளையாட்டு போட்டி ஜப்பானின் டோக்கியோ நகரில் இன்று ஆரம்பமாகிறது.

ஒலிம்பிக் விளையாட்டு போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 3வது முறையாக கடந்த ஆண்டு நடைபெற இருந்தது. ஏற்பாடுகள் எல்லாம் முடிந்த நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பிரச்னை எழுந்ததை அடுத்து போட்டி இந்த ஆண்டுக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

ஜப்பானில் இப்போதும் கொரோனா பரவல் அச்சுறுத்தல் நிலவுவதால் அங்கு ஒலிம்பிக்கை நடத்த கடும் எதிர்ப்பு, போராட்டங்கள் நடந்தன. எனினும், இந்த ஆண்டு போட்டியை நடத்துவதில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியும், ஜப்பான் அரசும் உறுதியாக உள்ளன.

அதற்கு வசதியாக நாடு முழுவதும் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. அதனால் எந்த பிரச்சினையுமின்றி ஒலிம்பிக் போட்டி இன்று தொடங்குகிறது.

போட்டிகள் அனைத்தும் பூட்டிய அரங்கில் நடக்கும். கால்பந்து, ஹாக்கிஇ டென்னிஸ், தடகளம் உள்பட குழு, தனிநபர் என 46 வகையான விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. மொத்தம் 11,683 வீரர்கள் பங்கேற்கின்றனர். இவர்களை தவிர பயிற்சியார்கள், அணி மேலாளர்கள், உதவியாளர்கள், மருத்துவர்கள், முடநீக்கியல் நிபுணர்கள் என 205 நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் இப்போது ஜப்பானில் முகாமிட்டுள்ளனர்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, உலக தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் உள்பட 1000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டின் பாரம்பரியப் பெருமையை விளக்கும் வகையிலான கலைநிகழ்ச்சிகள், பார்வையாளர்களை பிரமிக்க வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை சார்பில் அமைச்சர் நாமல் ராஜபக்ச இதில் பங்கேற்க உள்ளார். ஆரம்ப நிகழ்வை பார்வையிடும் சந்தர்ப்பம் ஜப்பான் மக்களுக்கு கிடைக்காது. இந்த நிகழ்வை நேரலையாக ஒளிபரப்புவதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

டோக்கியோ ஒலிம்பிக்சில் இதுவரை இல்லாத அளவுக்கு 119 வீரர், வீராங்கனைகள் இந்தியா சார்பில் பங்கேற்கின்றனர். இவர்களோடு பயிற்சியாளர்கள், நிர்வாகிகள் என மொத்தம் 228 பேர் அடங்கிய பிரமாண்ட இந்திய குழு டோக்கியோ சென்றுள்ளது.

தொடக்க விழா அணிவகுப்பில் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், இந்திய ஆண்கள் ஹாக்கி அணி கேப்டன் மன்பிரீத் சிங் இருவரும் தேசியக் கொடி ஏந்தி தலைமையேற்க உள்ளனர்.

 

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...