குளியாபிட்டிய ஆதார வைத்தியசாலையில் மேலும் சில பிரிவுகளை ஆரம்பிக்க தீர்மானம்!

Date:

குளியாபிட்டிய ஆதார வைத்தியசாலையில் இருதயவியல், நரம்பியல், நுரையீரல் மற்றும் முதியோர் பராமரிப்பு சேவைகளுக்காக புதிய பிரிவொன்றை ஆரம்பிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (20) ஆலோசனை வழங்கியுள்ளார்.

 

குளியாபிட்டிய ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பில் பாராளுமன்ற குழு அறை 01இல் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

 

வைத்தியசாலையில் புதிய பிரிவை ஆரம்பித்து பிரதேச நோயாளர்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் குளியாபிட்டிய வைத்தியசாலையை அபிவிருத்தி செய்ய வேண்டும் என பிரதமர் சுட்டிக்காட்டினார்.

 

குளியாபிட்டிய ஆதார வைத்தியசாலையில் காணப்படும் பிரச்சினைகள், தற்போதைய நிலை மற்றும் அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய பிரிவுகள் தொடர்பில் ஆதார வைத்தியசாலையின் வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் பிரபாத் வேரவத்த அவர்களினால் தெளிவுபடுத்தப்பட்டது.

 

மேலும், குருநாகல் மாகாண வைத்தியசாலையை தேசிய அளவில் மேம்படுத்தப்பட்ட வைத்தியசாலையாக மாற்றுவதற்கு தேவையான வைத்திய பிரிவு, சிறுவர் மருத்துவ பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவு ஆகிய மூன்று பிரிவுகளை கொண்ட 14 மாடிகளை கொண்ட கட்டிடத் தொகுதியாக நிர்மாணிப்பதற்கான தொழில்நுட்ப ஒப்புதலை கோர இதன்போது தீர்மானிக்கப்பட்டது. அத்தீர்மானத்திற்கமைய சில மாதக் காலங்களுக்குள் இந்த கட்டிடத் தொகுதியின் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...