கொழும்பில் நேற்றைய தினம் அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம்!

Date:

நேற்றைய தினம் (16) இனங்காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களில் அதிகளவான தொற்றாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகி உள்ளதாக கொவிட் 19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

 

இதற்கமைய ​கொழும்பு மாவட்டத்தில் நேற்றைய தினம் 252 கொவிட் தொற்றாளர்கள் பதிவாகி இருந்தனர்.

 

அத்துடன் கம்பஹா மாவட்டத்தில் 232 தொற்றாளர்களும், களுத்துறையில் 153 பேரும் மற்றும் பதுளையில் 140 பேரும் தொற்றுக்கு உள்ளாகி இருந்தனர்.

 

அதனடிப்படையில் நேற்றைய தினம் நாட்டில் மொத்தமாக 1,517 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 

அத்துடன் நேற்றைய தினம் தொற்றுக்கு உள்ளானவர்களுள் 71 பேர் வௌிநாடுகளில் இருந்து வருகை தந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

Popular

More like this
Related

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...