சீதுவை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி!

Date:

சீதுவை, பேஸ்லைன் வீதியில் மோட்டார் வாகனம் ஒன்றை சோதனைக்கு உட்படுத்திய போது பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

நேற்று (17) இரவு பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கு அமைய சந்தேகத்திற்கு இடமான வாகனம் ஒன்றை பின் தொடர்ந்து சென்று சோதனைக்கு உட்படுத்தியதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமாகிய அஜித் ரோஹண தெரிவித்தார்.

 

இதன்போது, மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் வாகனத்தில் பயணம் செய்த ஒருவர் காயமடைந்த நிலையில் நீர்க்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

 

44 வயதுடைய சீதுவை பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த நபர் பல்வேறு குற்றச் சம்பவங்களுடனும் மற்றும் 6 கொலை சம்பவங்களுடனும் தொடர்புபட்ட நபர் என தெரிய வந்ததுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் குறிப்பிட்டார்.

 

துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்படும் போது மோட்டார் வாகனத்தில் மேலும் இருவர் இருந்ததாகவும், குறித்த இடத்தில் இருந்து மைக்ரோ ரக கைத் துப்பாக்கி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.சம்பவம் தொடர்பில் சீதுவை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

Popular

More like this
Related

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நோக்கிச் சென்று கொண்டிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று...

நாட்டின் பல பகுதிகளில் 75 மி.மீ. இற்கும் அதிக பலத்த மழை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல்  மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை ,...

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....