எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் சுதந்திர சதுக்கத்தில் ஐக்கிய மக்கள் சக்தியினர் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.
“ஜனநாயகத்தைப் பாதுகாப்போம் – மனித சுதந்திரத்தைப் பாதுகாத்திடு” எனும் கருப்பொருளில் ஐக்கிய மக்கள் சக்தி, சிவில் சமூக அமைப்புகள், ஐக்கிய இளைஞர் சக்தி, மற்றும் ஐக்கிய மகளிர் சக்தி என்பன ஒன்றினைந்து சுதந்திர சதுக்கத்தில் இன்று (09) அமைதியான ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.