தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டத்தால் தகவலறியும் உரிமை நீர்த்துப்போய்விடக்கூடாது- ட்ரான்ஸ்பெரன்சி இன்டர்நெசனல்!

Date:

தனிநபர் விபரப் பாதுகாப்பு. சட்டமூலத்தின் ஊடக, தகவல் அறியும் உரிமை சட்டம் நீர்த்துப்போய்விடக்கூடாது என ட்ரான்ஸ்பெரன்சி இன்டர்நெசனல் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

 

அதன் அறிக்கை ஒன்றில் இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

 

இலங்கையிலும் ஏனைய உலக நாடுகளிலும் உள்ள பிரஜைகளுக்கு தகவல் ஒரு கருவியாகவும் ஆயுதமாகவும் மாறிவரும் இன்றைய சூழலில் தனிப்பட்ட தகவல்களின் பாதுகாப்பிற்கான சட்ட கட்டமைப்பு ஒன்றை உருவாக்குவது நிச்சயமாக மனித உரிமைகளை வென்றெடுக்கும் பயணத்தில் ஒரு முக்கியமான மைல் கல்லாக அமையும்.

 

பிரஜைகளின் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாப்பதற்காகவும் அவற்றை பொறுப்புடன் பராமரிப்பதற்காகவும் ஒரு பொறிமுறையை அமைப்பதற்காக அயராது உழைத்த சகல தரப்பினருக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்ளும் அதேவேளை, இந்த சட்டமூலத்தின் மிகச் சிறந்த சட்ட அமுலாக்கத்திற்காக மீள் பரிசீலிக்கப்பட வேண்டிய ஐந்து பிரதானமான விடயங்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

 

இதன்படி, தனிப்பட்ட தரவைப்பாதுகாக்கும் சட்டமானது, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை விட மேலோங்கும் பட்சத்திலும் இரண்டு சட்டங்களுக்கிடையேயான முரண்பாடுகளை ஏற்படுவதை தவிர்ப்பதற்காகவும் விதிவிலக்குகளை உள்ளடக்க வேண்டும்.

 

சட்டத்தின் பிரதான நோக்கத்தை உறுதிப்படுத்தும் வகையில் ஒரு சுயாதீன தரவு பாதுகாப்பு அதிகார சபை ஒன்றை நிறுவ வேண்டும்.

 

தனிப்பட்ட தரவு பாதுகாப்புச் சட்டத்தில் குறிப்பிடப்படும் ‘தனிப்பட்ட தரவு’ என்பதனை வரைவிலக்கணம் செய்தல், தகவல் அறியும் உரிமைச் சட்டத்துடன் தொடர்புபடுத்தல் ஆகும் என்பதால், இதனூடாக ஏதேனும் தனிப்பட்ட தரவுகளை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தினூடாக பெற்றுக்கொள்ளும் போது அது தனிப்பட்ட தரவு பாதுகாப்பு சட்டத்துடன் முரண்படுவதற்கான வாய்ப்பை குறைக்கும்.

 

நிதிசார் தகவல்கள் மற்றும் குற்றவியல் குற்றங்கள், குற்றவியல் வழக்குகள் மற்றும் நீதிமன்றத்தினூடாக குற்றவாளிகளெனத் தீர்ப்பளிக்கப்பட்டவர்களின் தகவல்கள் தனிப்பட்ட தரவுகளின் விசேட வகைப்படுத்தலின் கீழ் நீக்குவதனூடாக ஊழல் உள்ளிட்ட பிற குற்றங்கள் தொடர்பான தகவல்களை பிரஜைகள் அணுகுவதற்கான சந்தர்ப்பங்களை இது பாதுகாக்கின்றது.

 

இறுதியாக தனிப்பட்ட தரவு பாதுகாப்பு திட்டத்தில் ‘ஊடகவியலாளர்களின் நோக்கத்திற்காக’ தனியான நிபந்தனை ஒன்றை உள்ளடக்குதல் என்பதன் கீழ், ஊடகவியலாளர்கள் தமக்கான தகவல்களை அணுகுவதை தேவையின்றி தடுப்பதை இந்த பரிந்துரை உறுதி செய்கிறது என்றும் ட்ரான்ஸ்பெரன்சி இன்டர்நெசனல் அறிவுறுத்தியுள்ளது.

Popular

More like this
Related

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...