தீபக் சஹரின் அதிரடியால் இந்திய அணி வெற்றி!

Date:

இலங்கை அணிக்கும், இந்திய அணிக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.

 

கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் இலங்கை அணி நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.இதற்கமைய, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில், 9 விக்கெட்டுகளை இழந்து 275 ஓட்டங்களை இலங்கை அணி பெற்றது.

 

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில், சரித் அசலங்க 65 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தார்.இந்திய அணி சார்பில் பந்துவீச்சில், புவனேஸ்வர் குமார், யுஸ்வேந்திர சஹால் ஆகியோர் அதிகபட்சமாக தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

 

இதையடுத்து, 276 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய இந்திய அணி, 49.1 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

இந்திய அணி சார்பில் தீபக் சஹர் ஆட்டமிழக்காமல் 69 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

 

பந்துவீச்சில் வனிந்து ஹசரங்க 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.இதற்கமைய இந்திய அணி 2-0 என்ற அடிப்படையில் ஒரு நாள் சர்வதேச தொடரை கைப்பற்றியது.

 

Popular

More like this
Related

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...