நடுக்குடா காற்றாலை மின் உற்பத்தி நிலையம் திறந்து வைப்பு!

Date:

மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள நடுக்குடா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நடுக்குடா காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தினை நேற்றைய தினம் (15) மாலை 4.30 மணியளவில் அமைச்சர் டலஸ் அழகப்பெரும வைபவ ரீதியாக திறந்து வைத்ததோடு, அதன் பணிகளை பார்வையிட்டார்.

 

மன்னார் – தலைமன்னார் பிரதான வீதி நடுக்குடா பகுதியில் அமைக்கப்பட்ட குறித்த மின் உற்பத்தி நிலையமே இவ்வாறு வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

 

மின் சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான், கே.திலிபன் ஆகியோர் இணைந்து வைபவ ரீதியாக திறந்து வைத்தனர்.

இதில் திணைக்கள தலைவர்கள்,அமைச்சின் செயலாளர்கள் உற்பட பலர் கலந்து கொண்டனர்.சுகாதார நடை முறைகளுக்கு அமைவாக குறித்த நிகழ்வு இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...