நாட்டின் இன்றைய வானிலை நிலவரம்! 

Date:

இலங்கையின் மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 50 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறைமாவட்டங்களிலும் பலதடவைகள் மழை பெய்யும்என எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், வடக்கு, வடமத்திய, வடமேல், மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என்றும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

வாடகை மற்றும் குத்தகை வீட்டு உரிமையாளர்களுக்கு பொலிஸாரின் முக்கிய அறிவித்தல்!

வீடுகள் மற்றும் கட்டிடங்களை வாடகை அல்லது குத்தகைக்கு எடுத்து, அவற்றைப் பயன்படுத்தி...

LPL தொடருக்கான வெளிநாட்டு வீரர்களின் பதிவு நாளை ஆரம்பம்!

லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடருக்கான வெளிநாட்டு வீரர்களின் பதிவு நாளை...

ஈரானுடனான அமைதி பேச்சுவார்த்தைகள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் நம்பிக்கை.

ஈரானுடனான அண்மைய சுற்று அமைதிப் பேச்சுவார்த்தைகள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட்...

இன்று இலங்கை வரும் வியட்நாம் ஜனாதிபதி

வியட்நாம் ஜனாதிபதி To Lam இன்றைய தினம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்....