நாட்டில் நேற்றைய தினம் 384,763 பேருக்கு கொவிட் தடுப்பூசி

Date:

இலங்கையில் நேற்றைய தினத்தில் (14) மாத்திரம் 384,763 பேருக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில் ஒரு நாளில் செலுத்தப்பட்ட அதிகளவான தடுப்பூசிகள் இதுவாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை நாட்டில் இதுவரை 4,873,123 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய, நேற்றைய தினத்தில் (14) மாத்திரம் 338,572 பேருக்கு சீனாவின் சைனோபார்ம் (sinopharm) தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது. மேலும், சைனோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் நேற்று 35,410 பேருக்கு போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, இதுவரை 385,885 பேருக்கு கொவிசீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளது. அத்துடன் இதுவரை 157,368 பேருக்கு ஸ்புட்னிக் V தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் 14,464 பேருக்கு ஸ்புட்னிக் V தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளது. அதேபோல், நேற்றைய தினம் 7416 பேருக்கு ஃபைசர் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ள நிலையில் இதுவரை 31,183 பேருக்கு ஃபைசர் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையில் அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டுள்ள சீன பிரஜைகள் 2,865 பேருக்கு சைனோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதுடன் 2,435 பேருக்கு இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பெரும்பாலான பிரதேசங்களுக்கு மழைக்கான வாய்ப்பு

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

2025ம் ஆண்டில் அரபு சர்வாதிகாரிகள் இஸ்ரேலிடம் இருந்து 2.9 பில்லியன் டொலர்கள் பெறுமதியான ஆயுதங்களை கொள்வனவு செய்துள்ளனர்

-லத்தீப் பாரூக் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளால் வழங்கப்பட்ட அதி நவீன...

ஊழியரை தாக்கிய பிரபல கொத்து கடை உரிமையாளர் கைது

இலங்கையின் முன்னணி கொத்து உணவு விற்பனையில் ஈடுபடும் சிற்றுண்டிச்சாலைகளின் உரிமையாளர் தமது...

அரச ஊழியர்களுக்கு சொத்து விபரங்களை வழங்க ஒருவார காலவகாசம்

2023 ஆண்டின் இலக்கம் 9 என்ற ஊழல் எதிர்ப்பு சட்டத்திற்கமைய அரச...