நாளை முதல் மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து, தொடருந்து சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

Date:

நாளை (1)முதல் மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து மற்றும் தொடருந்து சேவைகளை ஆரம்பிக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

 

சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய பயணிகளுக்காக இவ்வாறு போக்குவரத்து சேவைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.அதற்கமைய, ஆசன எண்ணிக்கைக்கு ஏற்ப பயணிகளை ஏற்றிச்செல்ல தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

 

இதேவேளை, முன்னதாக இடைநிறுத்தப்பட்டிருந்த மாகாணங்களுக்கு இடையிலான தொடருந்து மற்றும் பேருந்து சேவைகள், அத்தியாவசிய சேவைகளை தடையின்றி முன்னெடுப்பதற்காக கடந்த 14 ஆம்திகதி மீள ஆரம்பிக்கப்பட்டது.

 

எனினும், கொவிட் பரவல் நிலைமைய கருத்திற்கொண்டு கடந்த 17 ஆம்திகதி முதல் நாளை (1) வரை குறித்த சேவைகளை இடைநிறுத்த போக்குவரத்து இராஜாங்க இராஜாங்க அமைச்சரினால் தீர்மானிக்கப்பட்டது.

 

இந்நிலையில், திங்கள் முதல் பயணக்கட்டுப்பாடு நீக்கப்பட்டால் நாளை மறு தினம் (2) முதல் மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து மற்றும் தொடருந்து சேவைகளை ஆரம்பிக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

 

எனினும், தற்போது நாளை முதல் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்தை முன்னெடுப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சற்றுமுன்னர் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம் அறிவித்தார்.

 

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...