பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தாதியர்கள் சங்கம் இன்றும் வேலை நிறுத்தம்

Date:

பதவி உயர்வு மற்றும் தாதியர் யாப்பில் மாற்றங்களை ஏற்படுத்தல் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து சுகயீன விடுமுறை போராட்டத்தில் தாதியர்கள் சங்கம் ஈடுபட்டுள்ளன.

இந்த போராட்டம் இன்றும்  முன்னெடுக்கப்படவுள்ளதாக தாதிய தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

மேலும், கொரோனா வைத்தியசாலைகள், சிகிச்சை மையங்கள் மற்றும் விசேட வைத்தியசாலைகள் என்பனவற்றில் இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படமாட்டாது என அந்த சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.

அவசர மற்றும் அத்தியாவசிய சேவைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேநேரம் அகில இலங்கை தாதியர் சங்கம் இன்றும்இ நாளையும் சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதாக சங்கத்தின் செயலாளர் எஸ்.பி மெதிவத்த தெரிவித்துள்ளார்.

தாதியர் சேவையில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் இதற்கு முன்னதாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில்இ சாதகமான முடிவுகள் கிடைக்காமை காரணமாகஇ சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதாக அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் தாதியர் சங்கங்களின் தொழிற்சங்க நடவடிக்கைக்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எதிர்ப்பு வெளியிட்டுள்ளதாக சங்கத்தின் மத்தியகுழு மற்றும் ஊடக குழு உறுப்பினரான வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Popular

More like this
Related

அசர்பைஜான் விமான நிலையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்

ஈரானின் ட்ரோன் தாக்குதலில் இருவர் காயமடைந்ததாக ஈரானுக்கு அசர்பைஜான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான்...

இலங்கையில் 5 மாவட்டங்களுக்கு கடும் வெப்பமான காலநிலை

சபரகமுவ மாகாணம் மற்றும் குருநாகல், கம்பஹா, மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல்...

இரண்டாவது ஈரானியக் கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் இல்லை :நளிந்த விளக்கம்!

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது...