நாடு இயல்பு நிலைக்கு திரும்பினாலும் சுகாதார நடைமுறைகளை முறையாக பின்பற்ற மக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் கடந்த ஒன்றரை மாதத்தில் நேற்றைய தினமே நாளாந்த தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகமாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்காலத்தில், நாடு வழமைக்கு திரும்பும் போது உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றாவிடின் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சுதந்திரத்தை மக்கள் அனுபவிக்க முடியாமல் போகும் என அவர் தெரிவித்துள்ளார்.