பொதுமக்களின் கோரிக்கைகளை வெல்வதற்காக வீதி போராட்டங்களில் ஈடுபடுவோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித்பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மேலும், வீதிப்போராட்டங்களை முன்னெடுப்பதற்காக நாட்டின் அனைத்து மூலைமுடுக்குகளில் இருந்தும் மக்களை அணிதிரட்டுவோம் என அவர் தெரிவித்துள்ளார்.பொதுமக்கள் வாழ்க்கை செலவு அதிகரிப்பைகுறைக்கவேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றனர், விவசாயிகளிற்கு உரங்கள் தேவைப்படுகின்றன,பாடசாலை மாணவர்கள் இணைய கல்வி தொடர்பான பிரச்சினைகளிற்கு தீர்வை காணவேண்டும் என எதிர்பார்க்கின்றனர் என தெரிவித்துள்ள எதிர்கட்சி தலைவர் ஆர்ப்பாட்டங்கள் குறித்து அச்சம்கொண்டுள்ள அரசாங்கம் பெருந்தொற்றுநிலையை பயன்படுத்தி மக்களின் உரிமைகளை ஒடுக்க முயல்கின்றது எனவும் தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தி பொதுமக்களின் உரிமைகளை பாதுகாப்பது குறித்து அர்ப்பணிப்புடன் உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
காணொளி