மணமகன் மற்றும் மணப்பெண்ணுக்கு விசேட அனுமதி அறிவிப்பு- பொலிஸ் ஊடகப்பிரிவு !

Date:

திருமண பந்தத்தில் இணையவுள்ள மணமகன் மற்றும் மணப்பெண் ஆகியோருக்கு மாகாணங்களுக்கு இடையில் பயணிப்பதற்காக விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

வெவ்வேறு மாகாணங்களில் வசிக்கும் மணமகன் மற்றும் மணப்பெண் ஆகியோருக்கு பயணக் கட்டுப்பாடுகளின் போது, ஏற்பட்ட சிக்கல்களை கருத்திற்கொண்டு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், மணமகன் மற்றும் மணப்பெண் ஆகியோரின் பெற்றோர்களுக்கும் மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க முடியுமெனவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டுள்ள பொலிஸாரிடம் தெளிவுபடுத்துமாறும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...