மேலும் 16 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் இலங்கைக்கு!

Date:

சீனாவினால் அன்பளிப்பு செய்யப்பட்ட மேலும் 16 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசி தொகையுடன் கூடிய விமானம் இன்று காலை இலங்கையை வந்தடைந்துள்ளது.

 

சீனாவின் பீஜிங் நகரில் இருந்து ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL 565 என்று தடுப்பூசிகளை எடுத்து வந்த விசேட விமானம், இன்று காலை 8 மணியளவில் இலங்கை வந்தடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

 

அத்துடன் தடுப்பூசிகளை எடுத்துவந்த ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான மற்றுமொரு விமானம் இன்று காலை 10.10 மணியளவில் கட்டுநாயக்க விமானத்தை வந்தடைந்து உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

சீனா அரசாங்கத்தினால் ஒரே தடவையில் அன்பளிப்பாக வழங்கப்பட்ட அதிகளவான சினோபார்ம் தடுப்பூசி தொகை இதுவாகும்.

 

அதனடிப்படையில் இதுவரையில் சீன அரசாங்கத்தினால் 27 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

2 ஆண்டு போர் முடிவுக்கு வந்தது: டிரம்ப் தலைமையில் இஸ்ரேல் – ஹமாஸ் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது: அடுத்து என்ன?

இஸ்ரேல் - காசா போர் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. நேற்று எகிப்தில்...

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை: தேடப்பட்டு வந்த சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைது!

‘கணேமுல்ல சஞ்சீவ’ என்று அழைக்கப்படும் பாதாள உலகக் குழுத் தலைவரான சஞ்சீவ...

நாட்டின் சில பகுதிகளில் 100 மி.மீ. வரையான பலத்த மழை

இன்றையதினம் (14) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்குப் பின்...