வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்த இராணுவ அதிகாரி கைது

Date:

மின்னேரியா தேசிய பூங்காவில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவ அதிகாரியை ஹபரண பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த இராணுவ அதிகாரி ஹபரண பொலிஸ் நிலையத்தில் இன்று (01) காலை சரணடைந்துள்ளதாகவும், கெக்கிராவ நீதவான் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டதாகவும், பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

கடந்த 23 ஆம் திகதி வனவிலங்கு அதிகாரிகளின் கடமைக்கு குறித்த இராணுவ அதிகாரி இடையூறு விளைவித்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இதனை அடுத்து இரு தரப்பிலும் பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(பின்னிணைப்பு – 12.40 pm) மின்னேரியா தேசிய பூங்காவில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இராணுவ அதிகாரி பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

Popular

More like this
Related

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...