வெளிநாட்டவர்களுக்கு விசாக்களை வழங்கும் நடைமுறையில் திருத்தம்!

Date:

வெளிநாட்டவர்களுக்கு விசாக்களை வழங்கும் நடைமுறையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.இதற்கமைவாக குடிவரவு குடியகல்வு திருத்த கட்டளை சட்ட மூலம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.

விசா இன்றி நாட்டில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களுக்கு விசா கட்டணங்களுக்கு மேலதிகமாக 500 அமெரிக்க டொலர் தண்டப்பணத்தை அறவிடுவது போன்ற திருத்தங்கள் இதில் உள்ளடங்கியுள்ளன.

சுற்றுலா விசா கட்டணத்தை அறிவிடும் போது ஒற்றை கட்டண முறையொன்றை அறிமுகப்படுத்துவதற்கும் சுற்றுலா விசா கால எல்லையை மூன்று மாதங்களிலிருந்து 9 மாதம் வரை அதிகரிப்பதற்கும் இதன்மூலம் எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர்கள் நாயகம் யூ.வி.சரத் ரூபசிறி தெரிவித்துள்ளார்.

 

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Popular

More like this
Related

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை: தேடப்பட்டு வந்த சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைது!

‘கணேமுல்ல சஞ்சீவ’ என்று அழைக்கப்படும் பாதாள உலகக் குழுத் தலைவரான சஞ்சீவ...

நாட்டின் சில பகுதிகளில் 100 மி.மீ. வரையான பலத்த மழை

இன்றையதினம் (14) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்குப் பின்...

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...