அசாத் சாலியின் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட அடிப்படை உரிமை மனு ஆகஸ்ட் 10 இல் விசாரணைக்கு!

Date:

மேல்மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் அசாத் சாலியின் சார்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுவை விசாரிப்பதற்கான தினத்தை உயர்நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது.

 

இந்த மனு குறித்து இன்று பரிசீலிக்கப்பட்ட வேளையில், அதனை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 10ஆம் திகதி விசாரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.

 

இஸ்லாமிய சட்டம் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்தொன்றை வெளியிட்டமைக்காக பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டு தடுப்பில் உள்ளார்.

 

அவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

எவ்வாறாயினும் அவர் கைது செய்யப்பட்டமைக்கு எதிராக அவர் சார்பில் உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனு ஒன்று தாக்கல் உ செய்யப்பட்டுள்ளது.இந்த மனுவே எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 10ஆம் திகதி விசாரணைக்கு வருகிறது.

Popular

More like this
Related

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...