அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது இந்தியா | இலங்கைக்கு நிர்ணயித்த வெற்றி இலக்கு

Date:

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் இலங்கை அணிக்கு 226 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 43.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 225 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது.

அவ்வணி சார்பில் பிரித்திவ் ஷா 49 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.

சஞ்சு சம்சன் 46 ஓட்டங்களையும், சூரியகுமார் யாதவ் 40 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் அகில தனஞ்சய 3 விக்கெட்டுக்களையும், பிரவீன் ஜயவிக்கிரம 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

போட்டியின் 23 ஆவது ஓவரில் மழை குறுக்கிட்ட காரணத்தால் போட்டியை 47 ஓவர்களுக்கு மட்டுப்படுத்த நடுவர்கள் தீர்மானித்துள்ளனர்.

Popular

More like this
Related

இன்று முதல் முச்சக்கர வண்டி கட்டணங்களில் மாற்றம்

ஒரு கிலோ மீட்டருக்கான முச்சக்கர வண்டி கட்டணத்தை 10 ரூபாவினால் அதிகரிப்பதற்கு...

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அநீதியான கைது: உச்ச நீதிமன்றத்தில் மாவனல்லை இளைஞருக்குக் கிடைத்த நீதி.

மாவனல்லைப் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய முகமது ரிஃபாய் முகமது சுஹைல்...

பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை உயர்வு!

இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் எடையுள்ள ஒரு இறாத்தல் பாணின்...

பாகிஸ்தானின் 86-வது தேசிய தினம்: இலங்கையில் விமரிசையான கொண்டாட்டம்!

இலங்கையில் வாழும் பாகிஸ்தானிய சமூகம் மற்றும் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் பாகிஸ்தானின்...