அரச சேவையில் பணியாற்றும் அனைத்து தரத்தை சேர்ந்த வைத்திய அதிகாரிகளுக்கும் ஓய்வூதியம் பெறும் வயது 63 வயதாக நீட்டித்து அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு ஒன்றை பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைச்சகம் நேற்று (30) வெளியிட்டது.
மேலும், முன்பு ஓய்வூதியம் பெரும் வயது 60 ஆக காணப்பட்ட நிலையில், இது கடந்த ஆண்டு 61 ஆக நீட்டிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.