இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில்
இலங்கை அணி 241 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
இதன்படி, முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 241 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இலங்கை அணி சார்பில் தனஞ்சய டி சில்வா 91 ஓட்டங்களை அதிகபடியாக பெற்றுக்கொடுத்தார்.
பந்துவீச்சில் இங்கிலாந்து அணியின் சேம் கரன் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இந்நிலையில் இங்கிலாந்து அணி 242 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாட உள்ளது.