இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டி 20 போட்டியில் இலங்கை 4 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி!

Date:

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டி 20 போட்டியில் இலங்கை 4 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளது.

 

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட இந்திய அணிக்கு அழைப்பு விடுத்தது.

 

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 132 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது.

 

இந்திய அணி சார்பில் அணித்தலைவர் சிகர் தவான் அதிகபட்சமாக 40 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.பந்து வீச்சில் அகில தனஞ்சய 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

 

அதன்படி, 133 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.4 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

 

இலங்கை அணி சார்பில் தனஞ்சய டி சில்வா ஆட்டமிழக்காது 40 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.மினோத் பானுக 36 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

 

பந்து வீச்சில் குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுக்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.இதற்கமைய, மூன்று போட்டிகள் கொண்ட  டி20 தொடர் 1-1 கணக்கில் தற்போது சமநிலையில் உள்ளது.

Popular

More like this
Related

இன்று முதல் முச்சக்கர வண்டி கட்டணங்களில் மாற்றம்

ஒரு கிலோ மீட்டருக்கான முச்சக்கர வண்டி கட்டணத்தை 10 ரூபாவினால் அதிகரிப்பதற்கு...

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அநீதியான கைது: உச்ச நீதிமன்றத்தில் மாவனல்லை இளைஞருக்குக் கிடைத்த நீதி.

மாவனல்லைப் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய முகமது ரிஃபாய் முகமது சுஹைல்...

பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை உயர்வு!

இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் எடையுள்ள ஒரு இறாத்தல் பாணின்...

பாகிஸ்தானின் 86-வது தேசிய தினம்: இலங்கையில் விமரிசையான கொண்டாட்டம்!

இலங்கையில் வாழும் பாகிஸ்தானிய சமூகம் மற்றும் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் பாகிஸ்தானின்...