கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தனிமைப்படுத்தப்பட்ட சில பகுதிகள் இன்று (14) காலை 6 மணி முதல் விடுவிக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம், கம்பஹா, பதுளை, நுவரெலியா, மட்டக்களப்பு, களுத்துறை, இரத்தினபுரி, கேகாலை மற்றும் மொனராகலைஆகிய மாவட்டங்களிலுள்ள 29 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.