இசை நிகழ்ச்சிகளை மண்டபத்திற்குள் நடத்துவதற்கு இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
50 வீதமானோரின் பங்குப்பற்றுதலுடன் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி, இசை நிகழ்ச்சிகளை நடத்த முடியும் என சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி 5000 ம் இருக்கை கொண்ட அரங்குகளில் 2500 பேர்களுக்கு அனுமதி.
எனினும், திறந்த வெளியில் இசை நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி வழங்கப்படவில்லை.
இதேவேளை, சிறுவர் பூங்காக்களையும் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.