இலங்கையில் கடந்த வாரத்தில் மாத்திரம் 11,056 பேருக்கு தொற்று உறுதி

Date:

இலங்கையில் இனங்காணப்படும் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பை அவதானிக்க கூடியதாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் கடந்த வாரத்தில் மாத்திரம் இலங்கையில் 11,056 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 17 ஆம் திகதி 1,452 பேருக்கும் 18 ஆம் திகதி 1,420 பேருக்கும் மற்றும் 19 ஆம் திகதி 1,487 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடு முடக்கப்பட்டதை தொடர்ந்து இவ்வாறு தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது என்பது பாரிய சிக்கலான விடயம் என சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

இதுவரையில் இலங்கையின் பல்வேறு பாகங்களில் இருந்து 61 பேருக்கு டெல்டா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இன்று முதல் முச்சக்கர வண்டி கட்டணங்களில் மாற்றம்

ஒரு கிலோ மீட்டருக்கான முச்சக்கர வண்டி கட்டணத்தை 10 ரூபாவினால் அதிகரிப்பதற்கு...

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அநீதியான கைது: உச்ச நீதிமன்றத்தில் மாவனல்லை இளைஞருக்குக் கிடைத்த நீதி.

மாவனல்லைப் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய முகமது ரிஃபாய் முகமது சுஹைல்...

பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை உயர்வு!

இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் எடையுள்ள ஒரு இறாத்தல் பாணின்...

பாகிஸ்தானின் 86-வது தேசிய தினம்: இலங்கையில் விமரிசையான கொண்டாட்டம்!

இலங்கையில் வாழும் பாகிஸ்தானிய சமூகம் மற்றும் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் பாகிஸ்தானின்...