அனேகமாக செப்டம்பர் மாதமளவில் நாட்டை முழுமையாக திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இராணுவதளபதி சவேந்திரசில்வா நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.கொரோனா வைரசினை தாகமுடைய அனேகமானவர்கள் ஒரு டோஸ் தடுப்பூசியையாவது பெற்றிருப்பார்கள் என்ற அடிப்படையில் நாட்டை செப்டம்பர் மாதமளவில் திறக்க முடியும் என எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இது அவ்வேளையில் காணப்படும் நிலவரத்தை பொறுத்தே இந்த முடிவை எடுக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.தொடர்ச்சியாக மாற்றமடைந்திருக்கும் வைரசினை நாங்கள் எதிர்கொண்டுள்ளோம் என தெரிவித்துள்ள சவேந்திரசில்வா இதன் காரணமாக புதிய சூழ்நிலைகளை எதிர்கொள்ளவேண்டியுள்ளது எனவும் அவர்தெரிவித்துள்ளார்.
நிலைமையை எதிர்வுகூறமுடியாது என தெரிவித்துள்ள சவேந்திரசில்வா செப்டம்பரில் நாட்டை முழுமையாக திறக்க முடியும் என உறுதியாக தெரிவிக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.