கம்மன்பிலவிற்கு எதிரான பிரேரணைக்கு எதிராக வாக்களித்த மக்கள் காங்கிரஸ் எம்.பிக்கள்!

Date:

அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

குற்றப்புலனாய்வு பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள அக்கட்சியின் தலைவர் றிசாத் பதியுதீன், திடீரென சுகயீனமுற்றதால், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இதனால் அவர், இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்ளவில்லை.

இந்த நிலையில் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான இஷாக் ரஹ்மான், அலி சப்ரி ரஹீம் மற்றும் எம்.எம்.முஷாரப் ஆகியோர் நம்பிக்கையில்லா பிரேரணையினை எதிர்த்து வாக்களித்தனர்.

இவர்கள் மூவரும் 20ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளித்ததனைத் தொடர்ந்து எதிர்க்கட்சியிலிருந்து கொண்டு ஆளும் கட்சிக்கு ஆதரவளித்து வருகின்றனர்.

இவ்வாறான நிலையிலேயே இன்று கொண்டுவரப்பட்ட அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

Popular

More like this
Related

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...