1990 ம் ஆண்டு கொக்காவில் செய்தி ஒலிபரப்பு கோபுரம் மற்றும் இராணுவ முகாம் மீதான தாக்குதலின் போது உயிரிழந்த கெப்டன் சாலிய அலதெனிய பி.டபிள்யூ.வி மற்றும் படையினர்கள் பொதுமக்கள் உள்ளிட்டவர்களின் 31 ம் ஆண்டு நினைவு தினம் இன்று (11) மாலை 5 மணியளவில் கொக்காவில் படை வீரர்கள் நினைவு தூபியில் இடம்பெற்றது.
652 ஆவது படை தலைமையகத்தின் படைத் தளபதியின் வழிகாட்டுதலுக்கு அமைவாக 6 ஆவது இலங்கை சிங்க ரெஜிமென்ட் படையணியின் படையினரால் ஏற்பாடுகள் செய்யப்பட்டதுடன் இராணுவ அணி வகுப்பு மரியாதையும் நினைவு தூபிக்கு மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
நிகழ்வில் வன்னி இராணுவ படைத் தலைமையக கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் டி.எம்.எச்.டி.பண்டார பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
அத்தோடு கிளிநொச்சி மாவட்ட இராணுவ உயர் அதிகாரிகள் உட்பட இராணுவ அதிகாரிகள் பலர் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தியதோடு 6 ஆவது இலங்கை சிங்க ரெஜிமென்ட் படையணியின் இராணுவ வீரர்களால் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.