கொவிட் 19 நோயால் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3500ஐக் கடந்தது.
நேற்றைய தினம் 35 பேர் கொவிட் 19 நோயால் மரணித்தனர்.இதனைச் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியதன் அடிப்படையில், இன்று அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டது.
இதன்படி கொவிட் 19 நோயால் இலங்கையில் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,502ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.