உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மேற்கொண்ட சஹ்ரான் ஹசீமின் அடிப்படைவாத வகுப்புக்களில் கலந்துகொண்ட இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான்.
நாரம்மல பகுதியை சேர்ந்த 24 வயதுடைய மொஹமட் சியாம் எனும் இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இதுவரையில் இவ்வாறு வகுப்புக்களில் கலந்துகொண்ட சம்பவம் தொடர்பில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.