தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் இரண்டு சிங்கங்களுக்கு கொரோனா தொற்றிய நிலையில் தற்போது இரண்டு சிம்பன்சிகள் மற்றும் இரண்டு ஒராங்குட்டான்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளன.
குரங்களுக்கு கொரோனா தொற்று என்ற அறிக்கை கிடைத்ததும், மேலதிக சோதனைகளுக்கு விலங்குகளை உட்படுத்தி அதை உறுதிப்படுத்துமாறு மிருகக்காட்சிசாலையின் அதிகாரிகளைப் பணித்துள்ளதாக வனஜீவராசிகள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸநாநாயக்க தெரிவித்தார்.
எனினும், நான்கு விலங்குகளும் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக தனக்குத் தகவல் கிடைத்ததாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.