சுற்றுலாப் பயணிகளை கவர புதிய திட்டம்!

Date:

கலாசாரத்தை பாதுகாத்து சுற்றுலாப் பயணிகளை கவரக் கூடிய வகையில் கண்டி, போகம்பறை சிறைச்சாலை வளாகம் புனரமைக்கப்படவுள்ளதாக வெகுஜன ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

 

கண்டி, போகம்பறை சிறைச்சாலை புனரமைப்பு தொடர்பாக மத்திய மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலுக்குப் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சர் இது தொடர்பாக தெரிவித்துள்ளார்.

 

மிக பழமை வாய்ந்த போகம்பறை சிறைச்சாலையின் புனரமைப்பு பணிகள் குறுகிய காலத்திற்குள் பூர்த்தி செய்யப்படும் என்று தெரிவித்தார்.

 

சுற்றுலாப் பயணிகள் நீண்ட காலம் கண்டியில் தங்கி இருக்கக் கூடிய வகையில் சுற்றுலா அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வது குறித்து கலந்துரையாடல் இடம் பெற்றதாக குறிப்பிட்ட அமைச்சர் கண்டிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் ஓரிரு தினங்கள் மட்டுமே கண்டி விடுதிகளில் தங்கி வெளியேறுகின்றனர்.

 

இந்த நிலையை மாற்றி கண்டி கிராமங்களில் உள்ள சுற்றுலா இடங்களுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் இடையில் நீண்ட கால தொடர்புகள் இருக்கக்கூடிய பரிவர்த்தனை இடமாக போகம்பறை சிறைச்சாலை புனரமைக்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...